கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் – அர்ச்சுனா

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (23) அமர்வில் இடம்பெற்ற கரைவலை மீனவர்கள் பிரச்சனை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிளிநொச்சி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்கப்படுப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் வழங்குவேன்.

கிளிநொச்சி மாவட்டம் மிகவம் பாதிக்கப்பட்டுள்ளது.என்னிடம் சில்லறை அரசியல் இல்லை.நாமல் மற்றும் ரோஹித்த ஆகியோருடன் ஒன்றிணைந்து மேடையேறிய போது இதனை கதைத்தேன்.இனியும் கதைப்பேன்.என்னிடம் குறுகிய அரசியல் நோக்கம் கிடையாது என்றார்.

Related Posts