தெல்தெனிய பெண் கொலை: தப்பியோடிய காதலன், மனைவி யாழில் கைது!!

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி ஆகியோர் அவர்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (23) தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து இன்று (24) அதிகாலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபர் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று வேடமணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தான் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று, அங்குள்ள தனது மற்ற இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிஸாரிடம் சரணடையவிருந்ததாகக் கூறியுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததுடன், கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Related Posts