பொது இடங்களில் கழிவுகளை வீசிவிட்டு செல்பவர்களை கண்காணிக்க கமரா!!

பொதுமக்கள் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை 24 மணிநேரமும் வழங்கும் வகையில் கழிவு சேகரிப்பு மையங்கள் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நிறுவப்பட்டு நடைமுறையில் உள்ளநிலையில் இதற்கு மாறாக பொது இடங்களில் கழிவுகளை வீசிவிட்டு செல்பவர்கள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு தண்டப்பணம் அறவிடும் செயற்பாடும் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் இச் செயற்பாட்டினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கும் பிரதேச சபையின் எல்லைக்குள் மேலும் 60 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தும் செயற்பாட்டினை நல்லூர் பிரதேச சபை ஆரம்பித்துள்ளது.

பொதுமக்கள் கழிவுகளை வீசிட்டுச் செல்லும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவ்விடங்களில் குறித்த கண்காணிப்பு கமராக்கள் பொருத்தும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் அவை தினமும் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார்

Related Posts