பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து !

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பாக பொலிஸ் மா அதிபர், மற்றும் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடிய பின்னர் சாதகமான தீர்மானமொன்று எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை.

நீதிமன்றத்தை நாடி பிணை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related Posts