வடக்கே நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தம் வலுவிழப்பு!!

இலங்கைக்கு வடக்கே நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது வலுவிழந்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பிராந்தியங்களிலும் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட பச்சை நிற அறிவித்தலை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வயம்ப, மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் இன்றைய தினம் 50 மி.மீற்றருக்கு அதிகளவான கனமழை பெய்யக்கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் முற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மழையுடனான காலநிலை தொடர்வதால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Related Posts