இளைஞன் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!! துணிந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞன் தாக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த போது அந்த பகுதியால் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியதுடன், தாக்குதல் நடத்தியவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளைஞன் ஒருவரை 3 பேர் கொண்ட குழுவொன்று சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியுள்ளது. தலைக்கவசத்தினால் தாக்கப்பட்ட இளைஞன் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

பண்டத்தரிப்பு நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தை ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.

கடமை முடித்து சிவில் உடையில் சென்று கொண்டிருந்த இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரான மதுராஜ், இந்த மோதல் சம்பவத்தை அவதானித்து விரைவாக செயற்பட்டு தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியுள்ளார்.

பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டிச் சென்று ஒருவனை மடக்கிப் பிடித்துள்ளார்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞன் இளைவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

தாக்கப்பட்ட இளைஞன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

Related Posts