நேற்று புதன்கிழமை (07) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லாஃப் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மாற்றியமைக்கப்பட்ட புதிய விலைகளாக, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 6,245 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எடையுள்ள சிறிய ரக எரிவாயு சிலிண்டரின் விலை 220 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,500 ரூபாவாகும்.
விலை அதிகரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை லாஃப் கேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.