விஜயின் வெற்றிக்கொண்டாட்டம்! யாழில் நபர் ஒருவர் உயிர்மாய்ப்பு!!

விஜயின் தேர்தல் வெற்றியைக் கொண்டாட இடம் பெற்ற மது விருந்தில் பகிடிவதைக்கு உள்ளான நபர் ஒருவரு தனது உயிரை மாய்த்துள்ளார்.

தெல்லிப்பழையைச் சேர்ந்த குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

தமிழக சட்ட மன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பெரு வெற்றிப்பெற்றுள்ளது. அதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இளைஞர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கோண்டாவில் பகுதியில் உள்ள தனது நண்பர்களுக்கு விஜயின் வெற்றியை முன்னிட்டு விருந்து வழங்க போதாக வீட்டில் கூறிச் சென்றவர். கோண்டாவிலில் நண்பர்களுக்கு மது விருந்து வழங்கிய நிலையில் விஜய் தொடர்பில் பகிடிகள் ஆராமித்து, அதொரு வதையாக குடும்பஸ்த்தருக்கு கடும் மனஅழுத்தை கொடுத்ததால், அவர் அங்கிருந்து கோண்டாவிலில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்று தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயின் வெற்றியினால் சந்தோஷமான விருந்து கொண்டாட்டம் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts