அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் நேற்றையதினம் (12) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவனின் உடல் நவாலி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

