- Thursday
- April 2nd, 2026
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். அதேவேளை குற்ற சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் பிரிவினரே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெவ்ரவரி மாதம் 10ஆம் திகதி...
அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற...
கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று, ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, பொலிஸார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) குறித்த போராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும், அதன்போது வாகனத்தை நிறுத்தாது சென்றமையால், வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி...
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் நேற்றையதினம் (12) வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து...
யாழில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். பொலிஸாரின் கட்டளைகளை மீறி பயணித்ததால் இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் (11) பொலிஸ் ஊடகப்...
சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை யாழ்ப்பாணம் அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த சம்பவத்தின் போது...
அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை, ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும்,...
