மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!

அரசாங்கத்தின் உறுதிமொழிக்கு இணங்க, அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்,

ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சராசரி செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி செலவைக் குறைப்பதன் மூலம் மட்டுமே மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பது சாத்தியமாகும்.

ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது.

தற்போது அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்வதுதான் செய்யப்படுகிறது.

அரசாங்கம் பதவியேற்றபோது, ​​மின்சாரம் வாங்குவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் ஒரு யூனிட்டுக்கு 37 ரூபாவாக இருந்தது.

தற்போது இந்த தொகை 22% குறைக்கப்பட்டு 29 ரூபாவாக உளளது.

மேலும், ஒரு யூனிட்டுக்கான செலவை 25 ஆகக் குறைப்பதே அரசாங்கத்தின் திட்டம்.

இந்த இலக்கை அடைவதன் மூலம், வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Posts