2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலை நிர்ணயத்தின் கீழ், 12.5 கிலோ கிராம் கேஸ் சிலிண்டர் 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.
5 கிலோகிராம் கேஸ் சிலிண்டர் 65 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 1,710 ஆகும்.
எனினும், லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விலை திருத்தம் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.