மருதங்கேணி, வத்திராயான் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (01) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்திராயான் பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
வத்திராயன் பகுதியிலுள்ள கோவிலில், ஒருவருடன் ஏற்பட்ட தகராறின்போது, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மருதங்கேணி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.