தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நேற்றைய தினம் விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது.
குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் , வேலன் சுவாமிகள் , வலிக்காமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர், மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களுமாக ஐந்து பேரை கைது செய்திருந்தனர்
கைது செய்யப்பட்ட ஐவரையும் விசாரணைகளின் பின் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, ஐவரையும் பிணையில் செல்ல நீதமன்றம் அனுமதித்தது.
அத்துடன், எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதேவேளை தவத்திரு வேலன் சுயாமிகள் யாழ் போனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தின்போது பொலீசார்ல் கைது செய்யப்பட்டபோது கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு திடீர் என சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.