காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உணவு திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் , உள்ளூர் உற்பத்தியாளர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையில் பதிவு செய்யுமாறு தவிசாளர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தி குறிப்பில்,
வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் ஏற்பாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்காகக் கொண்டு வலி வடக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமான உணவு திருவிழா எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் போது உள்ளூர் உணவு உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை விற்பனை செயனவதற்கு இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னராக கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தலைமை அலுவலகத்தில் தமது கோரிக்கையைச் சமர்ப்பியுங்கள் என தவிசாளர் கோரியுள்ளார்.