நெடுந்தீவு மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சிற்று காலநிலை காரணமாக கடற்போக்குவரத்து பாதிக்கப்படுள்ளதையடுத்து நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்கும்படி நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையை தொடர்ந்து பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ்
போதாக வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளை உடனடியாக மாற்றம“ செய்ய
முடியாத நிலை காணப்படுகிறது.

எனவே நெடுந்தீவுப் மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி போன்ற தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வைத்தியசாலை
நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடற்போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய
அதிகாரியினால் நோயாளர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பிவைக்க விமான படையினரின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts