இனக்குரோதத்தை தூண்டும் வகையில் பொதுப்பாதுகாப்பு அமைச்சரது உத்தரவில் சட்டவிரோத புத்தர்சிலை திருகோணமலையில் நிறுவப்பட்டமையை கண்டித்து அனைத்து தரப்புக்களும் கட்சிபேதங்களை கடந்து எதிர்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன பேதங்களைக் கடந்து தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவரும் இவ் இனக்குரோத செயலை எதிர்க்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.