பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு!

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பொலிஸாரைக் கண்டு அதிர்சியடைந்த சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த 24வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts