திலீபனின் நினைவுப்படம் பொலிஸாரால் அகற்றப்பட்டது!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (19) காலை பொலிஸாரால் திலீபனின் நினைவுப்படம் அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவுத் திருவுருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளால் திலீபனின் நினைவுப்படம் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts