மாகாணசபை தேர்தல் தாமதத்திற்கான காரணத்தை யாழில் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!!

மாகாணசபை தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே காரணம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை (15) விஜயம் மேற்கொண்டு தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபை தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே காரணம். சட்ட வரைவால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது. இது தீர்க்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடைபெறும். அதற்கு தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருக்கின்றது.

அல்லது குறித்த தீமானத்தை தற்போது பாராளுமன்றில் தனிநபர் பிரேரணையூடாக நிறைவேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது என தெரிவித்தார்

Related Posts