வேலணையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவேந்தல்!!

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத்தூபியில் நடைபெற்றன.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Posts