எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த வெப்பத்தை மனித உடலால் உணரக்கூடியதாக இருக்குமென்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக நீர் அருந்துமாறும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மக்களை கேட்டுள்ளனர்.
அதேநேரம், வெளிப்புற வேலைத் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிக நீர் அருந்தவும், நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்கவும், தங்கள் செயல்பாடுகளை வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.அதேநேரத்தில், பெற்றோர்கள், குழந்தைகளை வாகனங்களுக்குள் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது எனவும் நினைவூட்டப்பட்டுள்ளது.
வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், நீரேற்றம், ஓய்வு மற்றும் நிழலுக்கு முன்னுரிமை அளிக்கவும், குளிர்ச்சியாக இருக்க வெளிர் நிற, சுவாசிக்கக்கூடிய ஆடைகளை அணியவும் வேண்டுமென அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.