குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கைவிலங்கின்றி நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டதுடன் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு அவர்களது கடமைகளை செய்ய அனுமதி வழங்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்ததை காணக் கூடியதாக இருந்தது.