கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பயன்பாட்டில் இருந்த ஒரேயொரு மின் தூக்கி செயலிழந்த நிலையில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் உட்பட சத்திர சிகிச்சை கூடம் என பெரும்பாலான நடவடிக்கைகள் முதலாவது மாடியில் காணப்படுவதனால் நோயாளர்கள் படிக்கட்டு வழியாக ஏற்றி இறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட நோயாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்தோடு வைத்தியசாலை பணியாளர்களும் நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளால் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். இதனால் இந்த நிலைமையை சமாளிப்பதற்காக நோயாளர்களை விடுதிகள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களுக்கு கொண்டு செல்லுதல் படிக்கட்டுகளின் வழியே ஏற்றி இறக்கும் பணிகளில் மாணவர்களையும் ஈடுப்படுத்தியுள்ளனர்.