இன்று முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும்.
அதற்கமைய, செய்மதி ஊடான ஸ்டார்லிங் அதிவேக, குறைந்த தாமதம் கொண்ட இணைய சேவையை இலங்கையிலுள்ள பயனாளர்கள் தற்போது பதிவு செய்து பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங் மூலம், நகர்ப்புறங்கள், கிராமப் புறங்கள் எனும் வேறுபாடுகளின்றி ஒரே தரத்தில் இணைய சேவையை பெற முடியும் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகக் குறைந்த மாதாந்த கட்டணமாக ரூ. 12,000 எனும் விலையில் கிடைக்கும் இந்த சேவைக்கு, உபகரணத்திற்கு ரூ. 118,000 மற்றும் அதனை விநியோகிப்பதற்கான கட்டணமாக ரூ. 5,820 உள்ளிட்ட ரூ. 123,820 செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.