யாழில் உரிமைகோரப்படாத நிலையில் 3 சடலங்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி விடுதி இலக்கம் 34இல் அனுமதிக்கப்பட்ட அடையாளங்காணப்படாத பெண்ணொருவரின் சடலமும், கடந்த 23ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த திருமதி ரு.கிரிஷாந்தன் எனும் பெண்ணின் சடலமும் , கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி விடுதி இலக்கம் 08இல் உயிரிழந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்த நல்லூராஜ் (வயது 63) ஆகியவர்களின் சடலங்களே இவ்வாறு உரிமை கோரப்படாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குறித்த சடலங்களை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு பிரதி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Related Posts