சட்டவிரோதமான முறையில் பயணித்த 07 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

பிரான்ஸின் ரியூனியன் தீவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த 07 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்டவர்கள் நேற்று (18.09.2023) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் பிரதேசங்களில் வசிப்பவர்கள், அவர்களில் 6 பேர் தமிழர்கள் மற்றும் மற்றைய நபர் சிங்களவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் அகதிகள் குடியுரிமை பெறும் நோக்கில் இவர்கள் சட்டவிரோதமான முறையில் ரீயூனியன் தீவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts