யாழ். பல்கலைக்கழக மாணவி கிளிநொச்சியில் உயிரிழப்பு!

கிளிநொச்சி- கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட மாணவி ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தனது வீட்டில் இவர் உயிர்மாய்ப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவரது சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து, சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related Posts