தியாகி திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(15) யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது.
முன்னாள் போராளியான விடுதலை பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் சமநேரத்தில் நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.