குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை!!

குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இறங்கு துறையின் கீழ் பகுதியில் இருக்கும் இரும்புகள் துருப்பிடித்து வலுவிழந்து காணப்படுவதனால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறங்கு துறை பகுதிக்கு மனித வலுவை பயன்படுத்தி பொருட்களை கொண்டு சென்று படகுகளில் ஏற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts