குருந்தூர் மலை நோக்கி படையெடுக்கும் சிங்கள மக்களும் பாதுகாப்பு படையினரும்!!

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம்(18.08.2023)பொங்கல் வழிபாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு சிங்கள் மக்கள்,பெளத்த பிக்குகள் மற்றும் சில அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இருப்பினும் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்படும் நிலையில் நேற்றையதினமே (17) குறித்த பகுதிக்கு சுமார் 30 வரையான சிங்கள மக்கள் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், 3 பேருந்துகள் மற்றும் 2 ரக் வாகனங்கள் உட்பட பலர் குருந்தூர் மலை நோக்கி படையெடுத்தவண்ணமுள்ளனர்.

Related Posts