வீடியோ கேம்களில் ஈடுபாடு : தவறான முடிவெடுத்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளான்.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்னை பகுதியை சேர்ந்த புஸ்பராஜா எழில்காந்த் (வயது 22) எனும் மாணவனே உயிர் மாய்த்துள்ளான்.

தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை யாரும் இல்லாத வேளை உயிரை மாய்த்துள்ளதாகவும், குறித்த இளைஞன் தனிமையை அதிகம் நாடி, வீடியோ கேம்களில் ஈடுபாடு உடையவராகவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts