அதிகளவில் சிறுவர்களை ஏற்றிய முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து!! 11 சிறுவர்கள் வைத்தியசாலையில்!!

கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி முன்பள்ளி சிறுவர்கள் 11பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று புதன்கிழமை காலை முன்பள்ளிச் சிறுவர்களை அதிகளவில் ஏற்றிக்கொண்டு பயணித்த முச்சக்கரவண்டி கவிழ்ந்துள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts