யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்தோடு போதைப் பொருள் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் கச்சதீவு அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர்களான ம.பிரதீபன், எஸ்.முரளிதரன்(காணி), திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts