Ad Widget

பல்கலை மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டம் : வருந்தத்தக்கது சுமந்திரன்

பயங்கரவாதம் எனக்கூறி மூன்று மாதங்களுக்கு பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை தடுப்பிலேயே வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுகின்ற வரை அதனை உபயோகிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்த தற்போதைய அரசாங்கம், அதனை திடீரென மீண்டும் பயன்படுத்துவதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

பயங்கரவாத செயல்கள் எதுவும் நடைபெறாமல் மக்கள் ஜனநாயக வழியில் போராடுவது அவர்களுக்கான உரிமை என்றும் இதற்காக அவர்களுக்கு தண்டனை வழங்குவது என்பது மிகவும் வருந்தத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

Related Posts