அடையாள பணிப்பகிஸ்கரிப்பிற்கு தயாராகின்றது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் எதிர்வரும் 21ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய சபை உறுப்பினர், மருத்துவர் பிரசாத் கொலம்பகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பளக் கொள்கையை மீறி தீர்மானம் எடுப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Posts