வெளிநாடு பயணமாகும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி போட்டிருப்பது அவசியமில்லை!!

இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பதுவன்துதாவ இதனைத் தெரிவித்துள்ளார்.

பயணம் செய்யும் நாடு மற்றும் தேர்ந்தெடுக்கும் விமானத்தைப் பொறுத்து தடுப்பூசி விதிமுறைகள் மாறுபடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான இலங்கைப் பெண்ணின் உறவினர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பான பரிசோதனை அறிக்கை எதிர்வரும் இரண்டு நாள்களுக்குள் வெளியிடப்படும் என்றும் மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பதுவன்துதாவ தெரிவித்தார்.

Related Posts