Ad Widget

வடக்கு, கிழக்கில் 9 மாவட்டங்களில் மாற்றுவலுவுள்ளோருக்கு பயிற்சிகள்

வடக்கு, கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் மாற்று வலுவுள்ளோருக்கு அடுத்த ஆண்டு விசேட தொழிற்பயிற்சி வழங்கி அவர்கள் வருமானத்தை ஈட்டும் வகையில் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதற்காக இலங்கை அரசும், உலக வங்கியும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன. அத்துடன் இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அனுமதியும் கிடைத்துள்ளது.

இவ்வாறு சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாற்று வலுவுள்ளோருக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனை அடுத்த ஆண்டு வடக்கு, கிழக்கிலும் விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாற்று வலுவுள்ளோருக்கு தொடர்ச்சியாக தொழிற்பயிற்சிகள் வழங்குவதற்காக உலக வங்கியின் நிதியும், இலங்கை அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் சமூக சேவைகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் பயன்படுத்தப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தச் செயற்திட்டத்துக்கு அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மாற்றுவலுவுள்ளோருக்கான இந்த தொழிற்பயிற்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாற்றுவலுவுள்ளோருக்கு அவர்களது இயலுமைக்குரிய வகையில் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் தொழில் ஆரம்பிப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்படும்.என்றார்.

Related Posts