கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடலத்தை அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி நேற்றையதினம் உயிரிழந்தார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மாரவிலயைச் சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடத்தை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இறப்பு விசாரணை அவசியமில்லை, மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பூதவுடலை காண்பிக்க முடியும், சடலத்தை உடகூற்று பரிசோதை, சடலம் பழுதடையாது மருந்தேற்றல் என்பவை செய்யப்படலாகாது என்பதுடன், சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது, சடலம் பொதியிடப்பட்டு முத்திரையிடப்படவேண்டும்(சீல்), முத்திரையிடப்பட்ட சடலம் எக்காரணம் கொண்டு மீளத் திறக்கப்படலாகாது, முத்திரையிடப்பட்ட சடலம் 24 மணிநேரத்தில் எரிக்கப்படவேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							