இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று(புதன்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனுரத்த பாதனிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒருவரிடமிருந்து ஏனையவர்களுக்கு கொரோனா பரவுகின்ற விகிதத்தினை அடிப்படையாக கொண்டே அவர் இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இந்த கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் ஆய்வு நடாத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸினை குறைத்து மதிப்பிட்டமை காரணமாக சில வைத்தியவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கச தலைவர் அனுரத்த பாதனிய தெரிவித்துள்ளார்.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							