புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று(புதன்கிழமை) மாலை 4.30 முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு கொச்சிக்கடை உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
புத்தளத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள புத்தளம் மாவட்டத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த அதிகமானவர்கள் புத்தளத்தில் காணப்படுகின்றமை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							