நாட்டின் ஐந்து நகரங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலேயே தூசு துகள்கள் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கும் எனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.