ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவின் அபிவிருத்திக்கு தலா 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

நாடுமுழுவதும் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் தலா 5 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டங்களை ஜனவரி மாதத்துக்கு ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் பிரதேச செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.

நேற்று அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

“நாடுமுழுவதும் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் தலா 5 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் முதல் கட்டமாக 2 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு பிரதேச செயலருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கிராம அலுவலர் பிரிவில் குழு ஒன்று அமைக்கப்படடுள்ளது. கிராம அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவை அலுவலர் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவார்கள்” என்றும் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.

Related Posts