நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒருமித்து, ஒற்றுமையாக எவ்வாறு எதிர்கொள்வது என நேற்று (17) இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிளவுபடாமல் தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி, ஒன்றாக கூடி எதிர்வரும் தேர்தலில் தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது தனது கருத்து எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதுக்கும், ஏனைய கருமங்களை கையாளுவதற்கும் தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக அவர்களுக்காக நீண்டகாலமாக செயற்படக்கூடிய கட்சியின் பின்னால் நிற்க வேண்டியது அவசியம் என தமது உறுப்பினர்கள் கூறியதாக இரா.சம்பந்தன் சுட்டிக் காட்டியுள்ளார்.

தொடர்ந்து மீண்டும் விரைவில் கூடி ஏனைய முடிவுகளை எடுத்த பின்பு மக்களுக்கு தமது முடிவினை அறிவிக்கப் போவதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Posts