நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் வண்ணமயமான நகரம் திட்டம் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாமல் ராஜபக்சவின் தலைமையில் இயங்கும் இளைஞர்கள் குழுவால் இந்ததத் திட்டம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நுண்கலைத் துறை மாணவர்கள், உள்பட சித்திரத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்யோர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிலங்கையில் படை வீரர்களை கௌரப்படுத்தும் சுவர் ஓவியங்கள் பல வரையப்படுகின்றன.
இந்தத் திட்டம் வடக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் தற்போது இடம்பெற்றவருகின்றது.
இதன் வெற்றியினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளில் இளையோர்கள் தமது கற்பனைக்குள் உருவான அழகிய சுவரோவியங்களை வரையவுள்ளனர்.
இதில் யாழ்ப்பாணத்தினை பிரதிபலிக்கக் கூடிய ஓவியங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓவியங்கள் வரையப்படும் என்று அதில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.