- Tuesday
- May 12th, 2026
பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி களமிறங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அந்தக் கட்சி ஈடுபட்டுள்ளதுடன் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது புதிய கட்சி தொடர்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே இந்த...
இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது எனவும் எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது....
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியில் நெருக்கடி நிலைமையில் தமிழ் அரசியல் சக்திகள் ஒருமித்து செயல்பட வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு, தமிழர்களின் தாயகத்தை மீட்க தமிழ் அரசியல்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக கிழக்கிற்கான வெள்ள நிவாரண உதவிப் பொருள்கள் நேற்று (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிழக்கிற்கான உறவுப்பாலம் எனும் தொனிப்பொருளில் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு யாழ் மாவட்டம் உள்ளடங்களாக நடமாடும் சேவையில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் வழங்கி...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் 2019 ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் கூறுகின்றன. இதில் தற்போது கிடைத்த தகவல்களின் படி முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் களுத்துறை மாவட்டம் சார்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
பூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது நாட்டில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் இவற்றின் பின்னணியின் சீனாவின் செயற்பட்டு வருகின்றது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருந்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்ச்சியில்...
அரசியலமைப்பிறகு மாறாக நாடாளுமன்றம் கலக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு மஹிந்த தேசப்பிரிய மாற்றியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “ஜனாதிபதியால் கடந்த 2019.11.09 ஆம் திகதி...
மத்திய வங்காள விரிகுடா பகுதியில் காணப்படும் தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி காங்கேசன்துறையில் இருந்து ஆயிரத்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளது. இந்த சூறாவளி “கஜா” என பெயரிடப்பட்டுள்ள இச் சூறாவளி எதிர்வரும் 24 மணித்தியாலங்களுள் மேற்கில் வலுவடைந்து வடமேல் திசையில் பயணிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இம்முறை பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தி களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, பல மாவட்டங்களிலிருந்து பிரதமர் மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் ஜனாதிபதி மக்கள் முன் உரையாற்றும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். அந்தவகையில், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான காரணத்தை ஜனாதிபதி விளக்கியுள்ளார். “2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி கொள்ளை அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள்,...
முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டது என்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டை உடைத்து ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஏழு பவுண் நகை, தண்ணீர் இறைக்கும் இயந்திரம், வீட்டு ஆவணங்கள்...
வடக்கில் இன நல்லிணக்கம் சீர்குலைத்திருப்பதாகவும் அதனை மீள கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று (சனிக்கிழமை) காலை அவர் முன்னெடுத்துள்ளார். இந்நிலையில் போராட்டம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள மூவின மக்களும்...
“நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு என ரஜனி பாணியில் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளே வேலைத் திட்டங்களை விரைவு படுத்துங்கள் எனவும், ஒருநாள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன் எனவும் கூறியுள்ளார். அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் நேற்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக...
நிலையான நாட்டை ஏற்படுத்துவது என்பது மக்களின் கைகளிலேயே அடங்கியுள்ளது. அதற்கான வழியை தலைவர்கள் என்ற ரீதியில் நாம் ஏற்படுத்தி தந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பமிட்ட வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியானது. இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் கருத்து வெளியிட்ட பிரதமர் இதுவே மக்களுக்கு...
2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றம் உறுப்பினர்களை தெரிவு செய்யப்படுவார்கள் என வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியானது. நாடாளுமன்றம் உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும். அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான...
பொலிஸ் திணைக்களம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்புக்கு ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார். அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் அவற்றின் கீழான திணைக்களங்கள் தொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பிலேயே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக் காலத்திலிருந்து தனியாக சட்டம் ஒழுங்கு அமைச்சு அமைக்கப்பட்டு அதன் கீழ்...
பெறுமதியான பரிசில் உங்கள் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கைவைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர் வழங்கி முறைப்பாடு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த...
தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்தில் காணாமற்போன 6 பேர் விமானப் படையினரால் இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானப்படையின் எம்17 உலங்கு வானூர்தியின் உதவியுடன் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டனர் என்று விமானப் படையினர் தெரிவித்தனர். நித்தகைக்குளம் மற்றும் அதனோடு...
இலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்று கொண்டுள்ளது. எனவே நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நவம்பர் 10ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது வடக்கு, வடமத்திய, கிழக்கு...
இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் அண்மையில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் செய்தியில் இது குறித்து பதிவிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஸ, “அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும்...
Loading posts...
All posts loaded
No more posts
