மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!

1990 களில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றையதினம் (22) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தமது சான்றுகளை சமர்ப்பித்ததுடன்,...