Ad Widget

வடக்கு – கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு எதிர்ப்பு

இலங்கையில் தீர்வாக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கைக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பு தோன்றியுள்ளது. மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தனி மாகாணமாகவே இருக்க வேண்டும் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. இனப் பிரச்சினைக்கு அதிகார...

என்றுமில்லாதவாறு இம்முறை பலப்படுத்திக் காட்டுங்கள் – எம்.ஏ.சுமந்திரன்

“2016ஆம் ஆண்டு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான ஆண்டாக இருக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை என்றுமில்லாதவாறு பலப்படுத்திக்காட்டுங்கள் வென்று தருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நடைபெற்ற த.தே. கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில்...
Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும்போக்கு விஞ்ஞாபனத்தை முன்வைத்திருக்கிறது – விஜயகலா குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும்போக்கு ரீதியான தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் வேட்பு மனுவில் கடும்போக்கு ரீதியான கொள்கைகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு...

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகாரம் பிரதிபலிப்பு – வித்தியாதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமே அக்கட்சிக்குள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகாரத்தை வெளிக்காட்டப் போதுமானது. - இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகள் ஒன்றிணைந்து அமைத்திருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 4 இல் சிலந்திச் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைமை...

வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு நிகரானது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்!

"நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு நிகரானது'' - என்று சுட்டிக்காட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளருமான டலஸ் அழகப்பெரும, இது நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி...

மஹிந்த பட்டாளத்தை வாக்குகளால் விரட்டியடிக்கவேண்டும் தமிழர்கள்! – சம்பந்தன்

"தமிழர்களைக் கொன்று குவித்து - அவர்களின் வாழ்விடங்களைத் தரைமட்டமாக்கி யுத்தவெற்றி என்று உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேசத்திற்கும் மஹிந்த அரசு பறைசாற்றியது. அப்போது வாயை மூடிக்கொண்டு அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் இன்று வடக்கு, கிழக்கில் வெற்றிலை சின்னத்திலும், வீணை சின்னத்திலும் வாக்குக் கேட்டுவருகின்றார்கள்.இவர்களை தமிழ் மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை...

கூட்டமைப்பின் சாதாரண கோரிக்கையை ஆராய தயார் – மஹிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாதாரண கோரிக்கைகள் குறித்து ஆராயப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளை - நாவுல பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டை பிளவுபடுத்தும் கோரிக்கைக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ஓற்றை ஆட்சிக்குள் இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது! – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து கொண்டு, அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கை பத்திரிகைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு இடையில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அது குறித்து...

த.தே.கூ.வின் தேர்தல் விஞ்ஞாபனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம், யாழ். மருதனார்மடம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தை வளாகத்தில் சனிக்கிழமை (25) மாலை வெளியடப்பட்டது. இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக்...