- Saturday
- November 7th, 2026
சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் அனோஜன் சிவராசாவை சந்திப்பதற்கு சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்புவதற்கு சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இவ்விஜயத்தின் போது, அனோஜன்...
சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சவூதி உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று மரண தண்டனை விதித்து பிறப்பித்த தீர்ப்பை...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்றையதினம் (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சவூதி சட்டத்தரணிகள் குழுவின் கூட்டு முயற்சியின் பலனாக இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டைத் தயாரிப்பதற்காக இலங்கை விசேட சட்டத்தரணிகள் குழுவிற்கும் சவூதி சட்டத்தரணிகளுக்கும் இடையே பல...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவுக்குப் புறப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட...
சிவராசா அனோஜனின் விடுதலையைக் கருத்திற்கொண்டு இன, மதபேதமின்றி சகலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் முயற்சிகளை வேண்டுமென்றே குழப்பும் வகையிலும், இந்த முயற்சி தோல்வியடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் சில தீய சக்திகள் செயற்படுவதனைக் காணமுடிகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதும், அனோஜனின் நலனுக்குப் புறம்பானதுமாகும். அனோஜனை மன்னிக்குமாறு கோருவதைத் தவிர இதுகுறித்து வேறு கருத்துக்கள் எதனையும் பொதுவெளியில் பகிர்வது உசிதமல்ல...
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 26 வயதான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பை நடத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில், செப்டெம்பர் 22 ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சி,...
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு நாட்டின் 5 முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரேபிய ஆட்சியார்களிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (SLWJA), தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (TMA),...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி இன்று (22) நல்லை ஆதீனத்திற்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி...
''சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம் வாழ வேண்டிய நிலை தொடருகின்றது" என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள்...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜன் எனும் இலங்கையரின் பெற்றோர்கள் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர். இச்சந்திப்பில் சிவராசா அனோஜனின் தந்தையான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரரான சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடனான கலந்துரையாடலின் போது,...
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார்....
