. மே-18 – Jaffna Journal

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருக்க வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினார் சிவாஜி

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று உயிர்நீர்த்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான நேற்று பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த அஞ்சலி நிகழ்வு... Read more »

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. தேவாலய மணி ஓசை ஒலிக்கவிடப்பட்டு தீபங்கள் ஏற்றி இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்காலநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்கள்... Read more »

யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளைத் தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு காண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தடைகள் கண்காணிப்புக்களை மீறி பல்கலை... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் – சிவாஜிலிங்கம் கைதாகி பின்னர் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியபோதே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் பொலிஸாருடனான கடும்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நினைவுகூரப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் குறித்த பதிவில், “முள்ளிவாய்க்கால் 12ஆவது ஆண்டு நினைவு... Read more »

யாழ்.பல்கலையில் மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றிவிட்ட காவலாளி!!

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பல்கலைக்கழக காவலாளி மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை... Read more »

பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக ஒருவர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பு கல்குடா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் எந்த உறுப்பினர்களையும் நினைவுகூருவதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில் பிரபாகரனின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு... Read more »

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதேவேளை யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல்... Read more »

தடைகளை மீறி முள்ளிவாய்க்கால் பகுதியில் வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு... Read more »

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு நந்திக் கடலோரத்தில் குறித்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. Read more »

இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முக்கிய அறிவிப்பு!

மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளில் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளடங்களான முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம்... Read more »

வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து வுவுனியாவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொலைகாணொளி ஊடாக அனுஷ்டிக்க சுமந்திரன் அழைப்பு!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழர்கள் அனைவரும் தொலைகாணொளி ஊடாக அதாவது Zoom வழியாக அனுஷ்டிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) தனது முகப்புத்தகத்தில் காணொளியொன்றைப்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு அனுமதி: முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பயங்கரவாத அமைப்பை நினைவுகூராமலும், கொரோனா விதிமுறைகளை மீறாமலும் நினைவேந்தலை நடத்தலாமென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பொலிசார் தாக்கல் செய்த தடை மனுவை இரத்து செய்யக் கோரி, இன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின்... Read more »

தடைக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் சிவாஜிலிங்கம் அஞ்சலி!!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்த உறவுகளுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். Read more »

முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்த நினைவேந்தல் தூபி உடைப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் , நினைவு தூபி உடைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இம்முறை புதிதாக நாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த 6.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பொது நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்... Read more »

மே 18! இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்க அழைப்பு

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் போரில்... Read more »

முள்ளிவாய்க்கால் மண்ணில் எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் – இராணுவத்தளபதி

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக... Read more »

நாம் விட்ட தவறுகளே இதற்கெல்லாம் காரணம் – விக்னேஸ்வரன்

இனப்படுகொலையாளிகள் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கும் என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கும் நாம் விட்ட தவறுகளே காரணம் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள... Read more »